பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

Photo of author

By Vijay

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது இயக்குனர் அமிர் குற்றச்சாட்டு! தவறான கருத்தை பரப்பி இங்குள்ள ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள்’ : அண்ணாமலை மீது இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு.

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மிக முக்கிய புள்ளிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த பட்டியல் வெளியான சில மணி நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஒரு புறம் திமுகவினர் அண்ணாமலை வெளியிட்டிருப்பது உண்மைக்கு மாறான அறிக்கை, இது குறித்து அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று கூறி வந்தனர்.
திமுகவினரின் இந்த பதிலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று பேசியது அண்ணாமலை தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு திமுக தனக்கு நஷ்ட ஈடாக ஐநூறு கோடியே ஒரு ரூபாய் தர வேண்டும் என கூறினார். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் அமீர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார்.
ஏப்ரல் 14 தேதி அண்ணாமலை வெளியிட போகும் ஊழல் பட்டியலுக்காகா எல்லாரும் போல நானும் ஆர்வமாக இருந்தேன் ஆனால் அவர் வருமானவரித்துறை அதிகாரிகள் போலா சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட பட்டியல் தான் இதில் எதுவும் புதிதாகவும் ஆச்சரியம் படும் அளவிற்கும் ஏதும் இல்லை.
மேலும் அவர் கூறுகையில் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திட்டம் போட்டு தவறான கருத்தை பரப்பி வருகிறார். வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல நினைத்தார்கள். ஆனால் அது புஸ்வானமாக மாறிவிட்டது.
ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது தனக்கு வருத்தமாக உள்ளது என்றும், அமைதியாக நடந்ததா இல்லையா என்பதை பற்றி முக்கியம் இல்லை. இந்த பேரணியால் மக்களுக்கு என்ன பயன். ஆனால் வட நாட்டில் ஏன் கத்தி வேல் உடன் வருகின்றனர். இது தொடக்கம் தான் அடுத்து மீண்டும் நடத்துவார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.