நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
143
#image_title

நடிகராக பிசியாகும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!!! எப்போது திரைப்படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நடிகராக தற்பொழுது பிசியாக நடித்து வரும் நிலையில் இவர். அடுத்து எப்பொழுது படம் இயக்குவார். என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

வாரணம் ஆயிரம், அச்சம் என்பது மடமையடா, வேட்டையாடு விளையாடு, நீதானே என் பொன் வசந்தம், என்னை நோக்கி பாயும் தோட்டா, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என்று பல படங்களை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மேலும் நடிகர் சியின் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். மேலும் இவர் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்பொழுது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தற்பொழுது நடிகர் விஷால் நடிக்கும் 34வது திரைப்படத்திலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் விஷால் நடிக்கும் 34வது படமான விஷால் 34 திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தற்பொழுது மற்றொரு பிரபலம் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது.

யாரு அந்த பிரபலம் என்றால் அது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் தான். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஷால், நடிகர் சமுத்திரக்கனி மற்றும் விஷால் 34 திரைப்படத்தின் இயக்குநர் ஹரி நான்கு பேரும் இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில் நெட்டிசன்கள் அனைவரும் தெய்வமே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா என்று கேலாயான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் இவர் அடுத்து எப்பொழுது திரைப்படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Previous articleபேய் ஓட்டுவது போல இளம்பெண் பாலியல் வன்கொடுமை!!! உத்திர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி!!!
Next articleஆதார் எண் போல் மாணவர்களுக்கு “அபார் எண்” வழங்க மத்திய அரசு முடிவு!!