யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ!

Photo of author

By Vinoth

யானை படத்தின் வெற்றி… மீண்டும் இணையும் ஹரி- அருண்விஜய்?… கூடவே இன்னொரு ஹீரோ!

இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து ஜுலை 1 ஆம் தேதி வெளியாகியான யானை திரைப்படமும் அருண் விஜய்க்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதன் மூலம் கடந்த சில படங்களில் தோல்வி அடைந்த இயக்குனர் ஹரிக்கும் ஒரு கம்பேக் படமாக அமைந்தது. இதனால் அருண் விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.