கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

Photo of author

By Parthipan K

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

Parthipan K

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் அடுத்த படம் சியான் 60 இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவர் பிள்ளை துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் சமீபத்தில் எதுவும் எதிர்பார்த்த வசூலையோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் நடிகர் விக்ரம் ‘கோப்ரா’ எனும் திரைப்படத்தில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அத்திரைப்படம் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஆதித்யா வர்மா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்றாலும் வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனலாம். ஆனால் துருவின் நடிப்பிற்கு பலபேர் ரசிகர்களாகி உள்ளார்கள், அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அதிகம் என தெரிவிக்கிறது கோலிவுட் வட்டாரம். 

துருவ் விக்ரம், சியான் 60 படத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி தனது முழு ஈடுபாட்டையும் அந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருந்த செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.