பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

0
201

பிசாசு 2 :ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகள் நீக்கம்… இயக்குனர் மிஷ்கின் எடுத்த அதிரடி முடிவு!

பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா சில நிமிடங்களுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் அறிவித்திருந்தார்.

மிஷ்கின் இயக்கிய 2016 ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தேய்வழக்கு பேய் படங்களுக்கு மத்தியில் வித்தியாசமான திரைப்படம் என பெயர் பெற்றது. அதில் அவர் பேயை தேவதைபோல் காண்பித்து இருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது பிசாசு 2 இயக்கி வருகிறார் மிஸ்கின். அதில் ஆண்ட்ரியா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். பூர்ணா  மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட ரிலீஸ் வேலைகளில் நடந்து வந்த நிலையில் இப்போது ரிலீஸ் தேதி அறிவிக்கபப்ட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என ஆண்ட்ரியா தன்னுடைய சமூகவலைதளப் பதிவில் அறிவித்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா 20 நிமிடம் அளவுக்கு நிர்வாணமாக நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. அந்த காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதால் அதை படமாக்கியதாக படக்குழு தெரிவித்தது.

இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்போது மிஷ்கின் ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சிகளை நீக்கிவிட்டதாகக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து “ஒரு தாய் மற்றும் அவரின் மகள் குறித்த கதை என்பதால் அந்த காட்சிகள் வேண்டாம் என நீக்கியுள்ளேன். இப்போது குழந்தைகளும் இந்த படத்தைப் பார்க்கலாம். அந்த காட்சிகள் நீக்கப்பட்டது மகிழ்ச்சியே.” எனக் கூறியுள்ளார்.

Previous articleமீண்டும் தொடங்கும் துருவ நட்சத்திரம்… கைப்பற்றுகிறதா ரெட் ஜெயண்ட் மூவிஸ்?
Next articleஷூட்டிங்கில் பளார் அரை விட்ட டெக்னீஷியன்கள்!..அதிர்ச்சியில் படப்பிடிப்பு  குழுவினர் !..