உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டப்பெயர்! அன்புடன் வழங்கிய பிரபல இயக்குனர்!

0
113
Director named udhayanithi stalin on his love
Director named udhayanithi stalin on his love

உதயநிதி ஸ்டாலினுக்கு பட்டப்பெயர்! அன்புடன் வழங்கிய பிரபல இயக்குனர்!

தமிழக முதலமைச்சரின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.பின்னாளில் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்ததால் இயக்குனர் ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

மேலும் தி.மு.க.வில் இளைஞர் அணி தலைவராகவும் செயல்பட்டார்.இவர் அரசியலில் தீவிரமாக பணிபுரிய ஆரம்பித்தார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டார்.சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றியையும் பெற்றார்.தேர்தல் பிரசாரத்தின்போது இவரின் பிரச்சார உரை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

தமிழக மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வரத் தொடங்கினார்.மேலும் அரசியலுக்கு வந்தவுடன் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார்.தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் திரைப்படங்கள் நடிப்பதையே நிறுத்திவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.முன்னதாக இவர் தமிழ் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆனவுடன் சேப்பாக்கம் தொகுதியில் இவரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இப்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார்.இவர் தன்னுடைய படத்தின் தலைப்பை உதயநிதி ஸ்டாலினை வைத்து வெளியிட்டார்.படத்தலைப்பை அறிவிக்க உதயநிதி ஸ்டாலின் பெயரை “மக்கள் அன்பன்” என்ற பட்டப்பெயரோடு அழைத்து புதிய போஸ்டரை சீனு ராமசாமி வெளியிட்டார்.எதிர்பாரா விதமாக இயக்குனரின் பட்ட பெயர் அறிவிப்பு தமிழ் சினிமாவிற்கு ஆச்சரியத்தை அளித்தது.இனி உதயநிதி ஸ்டாலினை மக்கள் அன்பன் என்றே ரசிகர்கள் அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K