மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை!

0
94
Can be used if used in recycling mode! Otherwise not!
Can be used if used in recycling mode! Otherwise not!

மறுசுழற்சி முறையில் பயன்படுத்தினால் பயன்படுத்தலாம்! இல்லையென்றால் இல்லை!

தமிழகத்தில் ஏற்கனவே நெகிளிகளின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் பல கடைகளில் இன்னமும் யாருக்கும் தெரியாமல் பயன்படுத்திக்கொண்டுதான் உள்ளனர். அதை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதும் இல்லை. மக்களும் அதனால் ஏற்படும் அபாயங்கள் தெரிந்தாலும், அதை கண்டு கொள்ளாமல் அவர்கள் நமக்கென்ன? என்பது போல வேலையை தொடர்கிறார்கள்.

இதன் பாதிப்புகள் அதிகபட்சமாக பெரும்பாலும் அனைவரும் அறிந்தாலும் பலராலும் அதை நிறுத்த முடிவதில்லை. நிறைய கம்பெனி பொருட்களில் பல வண்ணங்களில் மக்களை கவர பல்வேறு வடிவங்களில் இன்னமும் தயார் செய்து கொண்டே உள்ளனர். பணத்தை மிச்சப்படுத்த எப்படி எல்லாம் வேலை செய்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளால் தான் மிகுந்த ஆபத்து உள்ளது எனவும் அறிவியலாளர்கள் சொல்கின்றனர். அதில் சூடாக எதுவும் உண்ணக் கூடாது எனவும் கூறுகின்றனர். அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக பல இடங்களில் அதை தவிர்த்தாலும், நிறைய இடங்களில் அதை தான் நாம் பயன்படுத்த வேண்டி உள்ளது.

இந்நிலையில், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது. ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நெகிழி உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி விற்பனை பயன்பாட்டுக்கு ஜூலை 1, 2022ஆம் ஆண்டு  முதல் தடை விதிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டு உள்ளது. நெகிழிகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது செப்டம்பர் 30ஆம் தேதி முதல் கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் அளவு 120 மைக்ரான் ஆக உயர்த்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு முறை பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.