இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள்!!

0
45
#image_title

இயக்குநர் பி.வாசு செய்த செயல் : குவியும் பாராட்டுகள்

இயக்குனர் பி.வாசு அவர்கள் தான் இயக்கிய சந்திரமுகி-2 படத்தின் அனைத்து உதவியாளர்களுக்கும் தனது பிறந்தநாள் பரிசாக மடிக்கணினிகளை வழங்கினார். அவரது இச்செயலுக்கு சினிமா வட்டாரத்தினர் பெரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

1981ஆம் ஆண்டு வெளியான “பன்னீர் புஷ்பங்கள்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பி.வாசு. இந்தப் படத்தை தனது நண்பரான சந்தானபாரதி உடன் சேர்ந்து இயக்கினார். பிறகு அடுத்தடுத்து கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பி.வாசு 1991ம் ஆண்டு “சின்னத்தம்பி” என்ற படத்தின் இமாலய வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு சென்றார்.

மன்னன், வால்டர் வெற்றிவேல், உழைப்பாளி, பொன்மனச் செம்மல் என முன்னணி நடிகர்களை வைத்து பி.வாசு இயக்கிய படங்கள் அனைத்து மெகா ஹிட் தான்.

60 படங்களுக்கு மேல் இயக்கிய பி.வாசு அவர்கள் தனது 69வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் பி.வாசு, தற்போது இயக்கியுள்ள ‘சந்திரமுகி 2’ படம், அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 65வது படமாகும்.

அவரது 69வது பிறந்தநாளை யொட்டி, ‘சந்திரமுகி 2’ படக்குழு சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அப்போது பி.வாசு தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு மடிக்கணினி பரிசளித்தார். அவருக்கு ஜி.கே.எம்.தமிழ் குமரன்,ராகவா லாரன்ஸ் மற்றும் படக்குழு வினர் வாழ்த்து தெரிவித்தனர். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்க ரன் தயாரித்துள்ள ‘சந்திர முகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனவத், வடிவேலு, ராதிகா, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவிமரியா, சுரேஷ் மேனன், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆர். டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எம். எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். இப்படம் கடந்த 15ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதமானதால், ரிலீஸ் தேதியை மாற்றி, வரும் 28ம் தேதி உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு கொண்டு வருகின்றனர்.

சந்திரமுகி- 2 படத்திற்கு பிறகு ஓய்வெடுக்க போவதாகவும், இனி படங்களை இயக்க போவதில்லை என இயக்குநர். பி.வாசு முடிவெடுத்துள்ளாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 

 

 

 

author avatar
Parthipan K