மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

0
46
#image_title

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இந்த அரசு மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும், இந்த அரசு மருத்துவமனையில் முக்கிய பணியில் இருக்கும் போது ஒரு அரசு ஊழியர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அரசு மருத்துவமனையில் அவசர மற்றும் விபத்து பிரிவு கட்டிடத்தில் வெளி நோயாளிகளுக்கு பதிவுச் சீட்டு வழங்கப்படுகிறது. ஆனால், அரசு ஊழியர் ஒருவர், வெளிநோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தும், அவர்களை கண்டுகொள்ளாமல் தனது இருக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனை வெளிநோயாளி ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனை கவனித்த அந்த ஊழியர் சுதாரித்துக் கொண்டு எழுந்து அந்த நோயாளியை கடுமையாக் திட்டி, சண்டையிட்டுள்ளார். இந்த வீடியோவை செல்போனில் இருந்து டெலிட் செய்ய வேண்டும் என்றுமர, அப்போது தான் பதிவுச் சீட்டு தான் வருவதாக கூறி மிரட்டி உள்ளார்.

இதையடுத்து, வெளிநோயாளி அந்த வீடியோவை தனது செல்போனில் இருந்து நீக்கி விட்டார். இருப்பினும் மற்றொரு நோயாளி இந்த சம்பவத்தை தனது செல்போனில் பதிவுச் செய்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளில் நடக்கும் தில்லு- முல்லு சம்பவங்களையும்; அஜாக்கிரதை சம்பவங்களையும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

 

author avatar
Parthipan K