நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா?

0
145
Director pa.ranjith directs actor vijay as superhero
Director pa.ranjith directs actor vijay as superhero

நடிகர் விஜய் உடன் கூட்டணி சேரும் இயக்குனர் பா.ரஞ்சித்! என்ன கதை தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே,இயக்குனர் செல்வராகவன்,யோகிபாபு,அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதனிடையே நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு இப்போதிருந்தே எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.அவரது ரசிகர்கள் அடுத்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் விஜய்யும் தனது அடுத்த படத்திற்கான கதையை முன்னணி இயக்குனர்கள் மற்றும் இளம் இயக்குனர்களிடம் கேட்டு வந்துள்ளார்.

ஆனால் இன்னும் எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று அவர் முடிவு செய்யவில்லை.இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்ககப்போவதாக கூறியுள்ளார்.இந்த படம் சூப்பர்ஹீரோ கதையாக இருக்கப் போகிறது என்று அவர் கூறியுள்ளார்.சூப்பர்ஹீரோ கதையென்றால் கற்பனைக் கதை மட்டுமல்ல என்றும் கற்பனைக்கும் நிஜத்திற்கும் உள்ள தொடர்பை வைத்து ஒரு கதை பண்ணியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம்,துசாரா,அசோக் செல்வன் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படம் காதல் கதையாக இருக்கும் என ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த படத்தை முடித்த பின்னர் நடிகர் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இயக்குனர் மிஷ்கின் அவர்கள் ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து ஒரு சூப்பர்ஹீரோ படம் இயக்கும் திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் அதற்க்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என அவர் கூறியிருந்தார்.

Previous articleஇங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணி அபார வெற்றி!
Next article15 நாட்களுக்கு ஒரு முறை இதை செய்ய வேண்டும்! திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு!