இங்கிலாந்துடனான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! இந்திய அணி அபார வெற்றி!

0
90

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்தது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 290 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை அடைந்தது 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்களை சேர்த்தது.

இதன் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி தன்னுடைய நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடியது. நான்காவது நாள் ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்களை சேர்த்து இருந்தது.அந்த அணியின் வெற்றிக்கு 292 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்றைய தினம் இந்திய நேரப்படி மாலை ஆரம்பமானது. ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் அரைசதம் அடித்தார்கள்.

இருந்தாலும் ரோரி பர்ன்ஸ் 50 ரன்கள் எடுத்த சூழ்நிலையில் இந்திய வீரர் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் நடையை கட்டினார். அடுத்து வந்த டேவிட் 5 ரன்கள் எடுத்திருந்த சமயத்தில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். கொஞ்சம் நிலைத்து நின்று விளையாடிய ஆசிப் அறுபத்தி மூன்று ரன்னில் நடையை கட்டினார். இருந்தாலும் மற்ற இங்கிலாந்து வீரர்கள் 2 ரன்னிலும் பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சற்று நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து களம் புகுந்த இங்கிலாந்து அணியின் வீரர்கள் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாமல் அடுத்தடுத்து தங்களுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

கடைசியில் இங்கிலாந்து அணி எல்லா விக்கெட்டுகளை பறிகொடுத்து 210 ரன்கள் மட்டுமே சேர்த்தது .இதன் காரணமாக 157 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

இந்திய அணியின் சார்பாக உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ப்ரா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

ஓவல் மைதானத்தில் இந்தியா 50 வருடங்களுக்கு பின்னர் வெற்றி கண்டிருக்கிறது இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நான் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நான் பார்த்த 3 பந்துவீச்சுகளில் இதுவும் ஒன்றாகும். ரிவர்ஸ் சுழல் பந்து வீசுவது பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள். எங்களால் பத்து விக்கெட்டுகளையும் விழுத்த இயலும் என்று நாங்கள் நம்பி இருந்தோம். ஷர்துல் தாகூர் மிக ஆபாசமாக செயல்பட்டார் என கூறியிருக்கிறார். அவருடைய இரண்டு அரை சதங்களும் எதிரியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்சிலும் மிகச் சிறப்பாக அவர் விளையாடினார் ரோகித் சர்மாவின் ஆட்டமும் மிக அற்புதமாக இருந்தது என்று தெரிவித்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி.

இரண்டு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால் சாதனை படைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்திய அணி தோல்வியின்றி இந்த தொடரை முடித்து வைத்தால் நன்றாக இருக்கும் ஒரு வேளை இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் தொடர் சமநிலை என சொல்லப்படுகிறது.