பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா நேர்காணலின் போது நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்து, நாக்கால் வருடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி மக்களின் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது. ஆர்ஜிவி என்று அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா தற்போது டேஞ்சரஸ் என்கிற ஒரு படத்தை இயக்கியுள்ளார், இந்த படம் வரும் டிசம்பர்-9ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த படம் பெண் ஓரினசேர்க்கையாளர் தம்பதியர் சமூகத்தில் தங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை சமாளித்து எப்படி திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார், அதில் ஒரு நடிகையின் காலில் முத்தமிடுவது போன்று இருந்தது. சிறிது நேரத்தில் அந்த வீடியோவையும் பதிவேற்றியிருந்தார். அந்த வீடியோவில் அவர் நடிகை அஷு ரெட்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறார், அஷு ரெட்டி சோபாவில் அமர்ந்திருக்க, கீழே தரையில் ராம் கோபால் அமர்ந்து இருக்கிறார். பேசிக்கொண்டு இருக்கையில் இயக்குனர், நடிகையின் அனுமதியை பெற்று அவரது காலை பிடித்து முத்தமிடுகிறார் அதன் பிறகு இப்பேற்பட்ட அழகியை படைத்த இறைவனுக்கு நன்றி என்று கூறிக்கொண்டே அந்த நடிகையின் கால் விரல்களை நாக்கால் வருடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, இதனைக்கண்ட நெட்டிசன்கள் இயக்குனரை திட்டி வருகின்றனர்.