இயக்குனர் ராம் இயக்கும் பதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

Photo of author

By Jayachithra

இயக்குனர் ராம் இயக்கும் பதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

Jayachithra

Updated on:

இயக்குனர் ராம் இயக்கும் புதிய படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கவுள்ளார்.

தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருக்கும்.

இவர் நீண்ட நாட்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், தற்போது மீண்டும் திரைப் படங்களை இயக்க உள்ளார். அடுத்ததாக இயக்குனர் ராம் மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து இயக்கவுள்ளார். இந்த படத்தை வி ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். மேலும், காமெடி நடிகர் சூரி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.