மின்சாரக் கனவு திரைப்படத்திற்கு பிறகு இணையும் முன்னணி நடிகர்கள்! இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த முயற்சி!

Photo of author

By Parthipan K

மின்சாரக் கனவு திரைப்படத்திற்கு பிறகு இணையும் முன்னணி நடிகர்கள்! இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த முயற்சி!

தமிழ் சினிமாவில் 1997ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மின்சார கனவு.இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சுவாமி நடித்திருப்பார்.மேலும் பிரபுதேவா,கஜோல்,நாசர்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோரும் நடித்திருப்பார்கள்.இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கியிருப்பார்.ஏவிஎம் ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.முக்கோண காதல் கதையாக இந்த படம் இருந்தது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.இந்த படத்தின் பாடல்களும் பெரிய வெற்றி பெற்றன.இந்த படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் கிடைத்தன.சிறந்த இசையமைப்பிற்காக ஏ.ஆர்.ரகுமானுக்கும் சிறந்த நடன ஆசிரியருக்காக பிரபுதேவாவிற்கும் சிறந்த பாடகருக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும் சிறந்த பாடகிக்காக சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடிகர் அரவிந்த்சுவாமியும் நடிகர் பிரபுதேவாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார்.தற்போது வெங்கட்பிரபு இயக்கும் நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிகர் பிரபுதேவாவும் நடிகர் அரவிந்த்சுவாமியும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தில் வில்லனாக கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கவிருக்கிறார்.விரைவில் இந்த திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.மேலும் இயக்குனர் வெங்கட்பிரபு படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.தற்போது இருபெரும் நடிகர்கள் நடிப்பதால் இந்த படத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஏற்கனவே இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படத்தில் நடிகர் அஜித்குமாரும் நடிகர் அர்ஜுனும் இணைந்து நடித்து அது பிரம்மாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.