சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்?

0
240
Director who cheated by pretending to be a cinema in Salem district! 300 young girls caught in porn video?
Director who cheated by pretending to be a cinema in Salem district! 300 young girls caught in porn video?

சேலம் மாவட்டத்தில்  சினிமா ஆசை காட்டி ஏமாற்றிய இயக்குனர்! ஆபாச வீடியோவில் சிக்கிய 300  இளம்பெண்கள்?

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல் சத்ரியன்(38). இவர் சேலம்  ஏ.வி.ஆர் ரவுண்டானா பகுதியில் ஒரு தனியார் கட்டிடத்தில் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி நேர்காணல் நடப்பதாகவும் விளம்பரம் செய்து வந்துள்ளார். அந்த அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜாபளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி(23) என்ற பெண் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் கனகா(30).இவர் கணவரை பிரிந்த நிலையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது இணையதளத்தில் சினிமாவில் நடிக்க வாய்ப்புள்ளதாக அளிக்கப்பட்ட விளம்பரத்தை கண்டார். அந்த விளம்பரத்தில் அந்த சினிமா நிறுவனம் சேலம் ஸ்டேட் பேங்க் காலனி என்ற முகவரி இருந்தது.

அதனையடுத்து கனகா துணை நடிகை வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார். அப்போது வேலுசத்ரியன் மற்றும் ஜெயஜோதி இருவரும் தாங்கள் தயாரிக்கும் படத்தில் துணை நடிகையாக நடிக்க வக்க வேண்டுமானால் முப்பதாயிரம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.அதற்கு கனகா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அவரை அலுவலக உதவியாளராக சேர்த்து கொண்டனர்.கடந்த மூன்று மாதங்களாக அந்த அலுவலகத்தில் கனகா வேலை செய்து வந்துள்ளார். அதற்கான ஊதியம் அவருக்கு வழங்கப்படவில்லை. கனகா சம்பளம் கேட்டபோது ஆபாச படத்தில் நடித்தால் பணம் தருவோம் எனவும் கூறியுள்ளனர்.

அதனையடுத்து வேலையை விட்டு கனகா நின்று விட்டார்.அவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அந்த புகாரில் சில பெண்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும் ,அந்த அறை முழுவதும் ஆபாச படங்களை ஒட்டி வைத்திருப்பதாகவும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வேல்சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள் .அந்த விசாரணையில் கடந்த எட்டு மாதங்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 300க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம்  எடுத்து வந்தது தெரியவந்தது.

Previous articleபயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!
Next articleநம்ப புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்!..மக்களையே கதிகலங்க வைத்த கோவக்கார பசங்க !!