மர்ம தேசத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் இவரின் பேரனா?

Photo of author

By Kowsalya

மர்ம தேசத்தில் நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் இவரின் பேரனா?

Kowsalya

சன் டிவியில் ஒளிபரப்பாகிய மர்ம தேசம் விடாது கருப்பு என்ற நாடகம் அனைவருக்கும் தெரியும். இதை பார்த்து பயப்படாதவர்களே இருக்க முடியாது, என்று கூறும் அளவிற்கு இயக்குனர் அந்த சீரியலை அவ்வளவு தத்துரூபமாக எடுத்திருப்பார். இது கொரோனா காலத்தில் மறுபடியும் சன் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

 

குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் லோகேஷ் என்பவர் ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றிருந்தார். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அந்த குழந்தை நட்சத்திரம் வரும் பொழுது நமக்கே பயம் ஏற்படுவது போல் இருக்கும்.

 

மாஸ்டர் லோகேஷ் யார் தெரியுமா? இந்த மாஸ்டர் லோகேஷ் எம்.ஆர். ராதாவின் தம்பி வழி பேரன். இவரது தந்தை பெயர் ராஜேந்திரன். இவரின் பெரியப்பா தான் எம் ஆர் ராதா. இவரும் பல சீரியல்களில் மற்றும் பல நாடகங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தனது மகன் நடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்.

 

சன் டிவியில் பிரம்மாண்டமான கதை தொடர் எடுக்க போவதாகவும், அதற்கு குழந்தை நட்சத்திரம் தேவைப்படுகிறது என்று, அறிந்த ராஜேந்திரன் தனது மகனை அழைத்து செல்கிறார்.

 

முதல் கட்ட ஆடிஷனிலேயே நல்ல நடிப்பை வெளிக்காட்டி அனைவரும் மனதில் இடம் பெற்றார். ஜீ பூம்பா தொடர், இது அனைத்து குழந்தை நட்சத்திரமும் விரும்பும் தொடர் . இந்த தொடரிலும் மாஸ்டர் லோகேஷ் அவர்கள் நடித்துள்ளார்.

 

பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார் மாஸ்டர் லோகேஷ். இவருக்கு இயக்குனராக வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதனால் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துள்ளார்.

 

அடிக்கடி மனைவியுடன் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்துள்ளது. மேலும் பல கஷ்டம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. லோகேஷன் மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டு பிரிந்துள்ளார்.

 

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மயக்க நிலையில் இருந்துள்ளார் மாஸ்டர் லோகேஷ். அங்கிருந்தோர் அவரை அடையாளம் கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மாஸ்டர் லோகேஷ்.

 

இவ்வளவு பெரிய பின்புலம் இருந்தும் இயக்குனராக மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார் லோகேஷ். எம் ஆர் ராதாவின் குடும்பமான ராதா ரவி, ராதிகா நினைத்திருந்தால் இவருக்கு உதவி செய்து

இருக்கலாம்.