குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! மீண்டும் உயர்கின்றது மதுபானங்களின் விலை!

0
152
#image_title

குடிமகன்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! மீண்டும் உயர்கின்றது மதுபானங்களின் விலை!

தமிழகத்தில் மீண்டும் ஒரு முறை மதுபானங்களின் விலையை தமிழக அரசு அதிகரிக்கப் போகின்றது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் மதுபானங்களை வாங்கி குடிக்கும் குடிமகன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனங்களில் டாஸ்மாக் நிறுவனமும் ஒன்று. தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. பாட்டிலுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் முதல் அதிகபட்சம் 40 ரூபாய் வரை விலையை அதிகரித்து உத்தரவிட்டது. தற்பொழுது வரை அந்த விலையில் தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்பொழுது குடிமகன்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.

அதாவது தற்பொழுது மீண்டும் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும் கூடிய விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.