மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

0
223
#image_title

மக்களவை தேர்தல் ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறதா? தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம்!

நம் இந்திய நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த தேர்தலில் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்தம் 543 தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் சில மாதங்களில் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு இருக்கின்றது.

ஒருபுறம் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது… மறுபுறம் அரசியல் களம் சூடுபிடித்து பிரச்சாரம், பொதுக்கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் வருகின்ற தேர்தலால் ஆட்சி மாற்றம் நிகழுமா? இல்லை இதே ஆட்சி நீடிக்குமா? என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் உள்ளது.

தேசிய கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவது ஒருபுறம் இருக்க… கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் கட்சி விட்டு கட்சி தாவும் சுவாரசிய நிகழ்வும் அரங்கேறி தான் வருகிறது.

கட்சி தாவல், அமைச்சர்கள் ஊழல் வழக்கு, ராமர் கோயில் அரசியல், கூட்டணி பேச்சுவார்த்தை… இவையெல்லாம் நடைபெற்று வரும் நிலையில்… நாடாளுமன்ற தேர்தல் தேதி வெளியானதாக மறுபுறம் தகவல் பரவி வருகிறது.

ஏப்ரல் 16 ஆம் தேதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக வெளியான செய்தி குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் 16 ஆம் தேதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதாக பரவும் செய்தி பொய்யானது. இந்த தேதிக்குள் தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளையும் அதிகாரிகள் திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தான் தலைமை தேர்தல் அலுவலகம் அனுப்பியது.. தேர்தல் நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தி உள்ளது.