உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

0
202
#image_title

உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விஷமாக மாறும் மயோனைஸ்!!

இன்றைய சூழ்நிலையில் மக்கள் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். சாண்ட்விச், பர்கர், சிக்கன் கிரில், ஷவர்மா போன்ற உணவுகளை மயோனைஸ் இல்லாமல் சாப்பிடுவதில்லை.

சுவை அதிகரிக்கவே மயோனைஸ் சேர்த்து சாப்பிடுகிறார்கள். அதிக அளவில் மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பார்ப்போம்.

மயோனைசை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் ஏற்படும். சர்க்கரை நோய் இருந்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் மயோனைஸ் தவிர்ப்பது நலம்.

மயோனைசில் கலோரிகள் அதிகளவில் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பு அதிகரித்து உடல் எடை கூடும். மேலும் தொப்பையின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

மயோனைசில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களின் அளவு மிக அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும், மயோனைசை அதிக அளவு உட்கொள்ளும் போது அது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மயோனைசை அதிக அளவு சாப்பிடுவதால் இதயம் சம்பந்தபட்ட பிரச்சினை ஏற்படும்.இதில் 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதால் கொலஸ்டிரால் அதிகரித்து இதய பிரச்சினை உண்டாகும் அபாயம் உள்ளது.

மயோனைசில் செயற்கை பொருட்கள் சேர்க்கப் படுவதால் தலைவலி, வாந்தி, உடல் சோர்வு போன்ற நோய்கள் உண்டாகும்.