ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி!!! தெருவுக்கு வந்த பாஜக உட்கட்சி மோதல்!!!

0
122
#image_title

ராஜஸ்தான் மாநிலத் தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தி!!! தெருவுக்கு வந்த பாஜக உட்கட்சி மோதல்!!!

ராஜஸ்தான் மாநில தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கு உண்டான சீட் கிடைக்காததால் பாஜக கட்சிக்குள் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. அதோடு மட்டும் இல்லாமல் இவர்கள் அனைவரும் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த மே மாதம் கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி அமோகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தற்பொழுது காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என்று வெளியான முடிவு பாஜக கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 41 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக கட்சி வெளியிட்டது. இந்த முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா இராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது பாஜக கட்சிக்குள் பெரும் மோதலை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும் பாஜக தலைவர் முகேஷ் கோயல் அவர்களுக்கும் ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான சீட் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் சீட் கிடைக்காததால் பாஜக தலைவர் முகேஷ் கோயல் அவர்கள் கதறி அழும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இது போல பாஜக கட்சியின் பல முன்னணி தலைவர்களுக்கும் இந்த ராஜஸ்தான் மாநில தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் மறுக்கப்பட்டு இருக்கின்றது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தொண்டர்கள் அனைவரும் பாஜக கட்சி தலைமைக்கு எதிராக தெருவில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டதற்கே பாஜக கட்சியில் உட்கட்சி மோதல் ஏற்பட்டு புரட்சி வெடிக்கின்றது. இந்நிலையில் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பாஜக தலைமை விழி பிதுங்கி இருக்கின்றது.

Previous article2000 ஆண்டுகளுக்கு முன்பு மேக்கப் சாதனங்கள் பயன்படுத்திய நகரம்!!! ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆச்சரியமான தகவல்!!!
Next articleநிகழப்போகும் சூரிய கிரகணம் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்ன்னு தெரியுமா?