தூக்கி எறிந்த பழைய சிம்-மால் ஏற்படும் விபரீதம்! அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை!
தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜியை தேடி ஓடுகின்றனர்.காத்திருக்கும் என்ற வாரத்தையை அகற்றி விட்டனர்.போனில் கை விரலை தட்டினால் சாப்பாடு,துணி உடனே வரும் என்பதை பழக ஆரம்பித்துவிட்டனர்.தங்களது செயல்கள் அனைத்தையும் செல்போனில் ஓரிரு நிமிடங்களுக்குள் செய்ய ஆரபித்துவிட்டனர்.
புதிதாக நாம் ஓர் ஆப் டௌன்லோட் செய்த உடன் நமது தொலைபேசி எண் மற்றும் நமது விவரங்களை கேட்டு வாங்கிகொள்ளும்.அதன் மூலம் பல ஓடிபி எண்கள் அந்த எண்ணிற்கு அனுப்படும்.இவ்வறு நாம் உபயோகம் செய்து வந்திருப்போம்.சில காரணங்களுக்காக நாம் உபயோகித்த சிம் கார்டை வேண்டாம் என்று எண்ணி தூக்கி எறிந்திருப்போம்.அந்த சிம் கார்டுகள் நமக்கு பல விதங்களில் பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்து விடும்.அமெரிக்கா பிரான்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறியதாவது,உபயோகம் செய்யாத சிம் கார்டுகள் மற்றும் தூக்கி வீசப்பட்ட சிம் கார்டுகளை மீண்டும் அந்நிறுவனம் மறுசுழற்சி செய்து வாடிக்கையாளர்களிடம் விற்று விடும்.
அந்தவகையில் மற்றொருவர் அந்த சிம் கார்டுகளை உபயோகித்து வருவார்.இந்த நிலையில் தான் சிக்கல்கள் ஆரம்பிக்கிறது.ஒருவர் பயன்படுத்திய பழைய சிம்களில் ஓடிபி,வங்கி கணக்குக்கான குறுஞ்செய்தி என ஆரமித்து அனைத்து தகவல்களும் அந்த சிம் கார்டுகளை உபயோக்கிக்கும் அந்த நபருக்கு அனுப்பப்படும்.இந்த தகவல்கள் அனைத்தும் அவர்கள் தவறான முறையில் பயன்படுத்த கூடும்.இந்த அதிர்ச்சி தகவலை அமெரிக்க ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஆய்வறிக்கையானது 200 நபர்கள் கொண்டு பழைய சிம் கார்டுகளை வைத்து ஆய்வு செய்துள்ளது.அதில் 20 சிம் கார்டுகள் எண்ணிற்கு இதை உபயோகித்த பழைய நபர்களுடைய விவரங்கள் ஒடிபி போன்றவை குறுஞ்செய்தியாக சென்றுள்ளது.இதை தற்போது உபயோகிக்கும் நபர்கள் எதற்கு இந்த குறுஞ்செய்தி வந்தது என புரியாமல் குழம்பி வருகின்றனர்.இந்த குருஞ்செய்தியானது மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கினால் பெருமளவு ஆபத்து ஏற்படும்.அதனால் பழைய எண்ணை தூக்கி வீசும் நேரத்தில் நாம் உபயோகம் செய்த அனைத்து செயலிகளிலும் தங்களது புது எண்ணை கொடுக்க வேண்டும்.