பதவியேற்றதும் தமிழகத்திற்கு விடியலை காட்டிய ஸ்டாலின்! இல்லத்தரசிகள் மனதில் பால் வார்த்த முதல்வர்!

0
85
Stalin announces action! Remtecivir through web service!
Stalin announces action! Remtecivir through web service!

பதவியேற்றதும் தமிழகத்திற்கு விடியலை காட்டிய ஸ்டாலின்! இல்லத்தரசிகள் மனதில் பால் வார்த்த முதல்வர்!

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது.தேர்தலுக்கு முன்னதாகவே பல கருத்துகணிப்புகள் வந்த வண்ணமாகவே தான் இருந்தது.அதில் பல கருத்துகணிப்புகள் திமுக-விற்கு சாதகமாவே இருந்தது.அதே போல 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது.வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே திமுக முதலிடத்தை வகித்து வந்தது.

அதிமுக வாக்கு எண்ணிக்கை தொடக்கத்திலிருந்தே பின்னடைவை சந்தித்தது.வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து திமுக 159 இடங்களில் முன்னிலை வகித்து ஆட்சியை கைப்பற்றியது.ஆனால் அதிமுக கூட்டணி கட்சிகளுடன் 75 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்தது.தமிழகத்திற்கு முதல்வராக ஆட்சி அமைத்தால் பல திட்டங்களை மேற்கொள்வதாக அறிக்கை கொடுத்தார்.அந்தவகையில் இன்று சென்னையிலுள்ள கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.அவர் பதவியேற்கும் பொழுது அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

அதனையடுத்து அண்ணா மற்றும் முன்னால் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி வணங்கினார்.இதனையொட்டி பலர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.இன்று மதியம் முதலே அவர் முதலமைச்சர் பதவிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார்.அந்தவகையில் இன்று,முதல் ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.

முதலாவதாக அரிசி ரேஷன் கார்டுக்கு கொரோனா நிதியாக ரூ.4000 வழங்குவதற்கு கையெழுத்திட்டார்.அதனையடுத்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமான திட்டத்தில் கையெழுத்திட்டார்.அதனையடுத்து இனி ஆவின் பால் விலையிலிருந்து ரூ.3 ரூபாய் குறைப்பு என்ற விதத்தில் கையெழுத்திட்டுள்ளார்.தமிழகத்திற்கு விடியலை தரும் நோக்கில் அவரது ஆட்சியை அமைந்து வருகிறது.