பேரிடர் மீட்புக்கான செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி!!

0
169
#image_title

பேரிடர் மீட்புக்கான செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்-பிரதமர் மோடி!!

பேரிடர் மீட்பு உட்கட்டமைப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

உட்கட்டமைப்பு என்பது வெறும் வருவாயை தருவதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அணுகலும் மீட்பு திறனும் கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் பெயரிடர் காலங்களில் யாரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் சேவையாற்றுவதாக உட்கட்டமைப்புகள் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

பேரிடர் காலங்களில் இயல்பு வாழ்க்கை வெகு விரைவாக மீட்டுக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதாக மீட்பு திறன் இருக்க வேண்டும் என தெரிவித்த பிரதமர் கடந்த கால பெயரிடரை படிப்பது மற்றும் அவற்றிலிருந்து கற்றுக் கொள்வது என்பதே வழி எனக் குறிப்பிட்டார்.

அண்மை காலங்களில் ஏற்பட்ட பேரிடர்கள் நாம் சந்தித்து வரும் சவால்களை நமக்கு நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது என தெரிவித்த பிரதமர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெப்ப அலைகள் இதற்கு உதாரணமாக திகழ்வதாகவும் பல்வேறு தீவு நாடுகள் பூகம்பம் புயல் எரிமலைவெடிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

நெருக்கமாக இணைந்த உலகில் பெயரிடர்களின் தாக்கம் உள்ளூர் சார்ந்தது மட்டுமல்ல என்றும் ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் பேரிடர்கள் முற்றிலும் வேறு பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே நமது செயல்பாடுகள் தனித்து இல்லாமல் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும் என பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

Previous articleராமநவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை : 130க்கும் மேற்பட்டோர் கைது!!
Next articleஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!! சிகிச்சை பெறுவர் எண்ணிக்கை  நாளுக்கு நாள் உயர்வு!!