திராவிட மாடல் ஆட்சியில் மிகப்பெரிய வளர்ச்சியை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் அடைந்திருக்கின்றனர். அதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் மட்டுமல்லாது தமிழ்நாடே 9.69% வளர்ச்சியை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் தங்களுடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் அவர்களுக்கான வளர்ச்சி குறித்த முடிவுகளில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று இருப்பதை விட 2024 2025 ஆம் ஆண்டு மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மிகப்பெரிய வளர்ச்சியில் கூட்டுறவு துறைகளுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் கூட்டுறவு துறையின் கீழ் நகை கடன் தள்ளுபடி திட்டம் 2021 மூலமாக ரூ.4,913 கோடி ரூபாய் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் தள்ளுபடி செய்யப்பட்டு வடக்கு வைக்கப்பட்ட நகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மீதான தள்ளுபடி, விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட தள்ளுபடிகளின் மூலம் தமிழக அரசு வெற்றிகரமாக கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கி வருகிறது.
மேலும் விவசாயிகளுக்கு என்று தனியாக பார்க்கும் பொழுது பயிர் கடன், உழவர் கடன் அட்டை திட்டம், கால்நடை வளர்ப்பு திட்டம், கால்நடைகளுக்கான உணவு பொருள் தொழில்களுக்கான திட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தொகைகள் வழங்கப்பட்டு விவசாயத்தை பெருமளவில் தமிழக அரசு முன்னேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்த நன்மைகள் குறித்தும் சிறப்பு திட்டம் மக்களுக்கான கடன் தள்ளுபடிகள் குறித்தும் அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.