எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!

Photo of author

By Rupa

எடப்பாடி வெளியிட்ட தள்ளுபடி! பட்ஜெட்டில் தள்ளுபடிகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியா இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர்.

அதனைத்தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் செய்யபோவதாக கூறிய அறிக்கைகளை அதிமுக எடப்பாடி தற்போதே செய்து முடித்தார்.அதாவது,திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயக் கடன்,நகைக்கடன் என அனைத்தையும் தள்ளுபடி செய்யப்போவதாக கூறி ஓரிரு நாட்களிலேயே எடப்பாடி பழனிசாமி திமுக கூறிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து பொதுமக்களுக்கும்,திமுக அரசிற்கு பேரதிர்ச்சி தந்தார்.

அதன்பின் திமுக தலைவர் 5 லட்ச கோடி விவசாயக் கடன்களை மட்டும் அதிமுக தலைவர் தள்ளுபடி செய்துள்ளார்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீதமுள்ள விவசாயக் கடனையும் தள்ளுபடி செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறயுள்ளார்.அந்தவகையில் இலவசங்கள் மற்றும் சலுகை திட்டங்களால் தமிழ்நாட்டில் கடன் சுமை அதிகரிக்கு என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய இடைக்கால பட்ஜெட் படி தமிழக அரசின் கடன் சுமையானது தற்போது 4 லட்சத்து 85 ஆயிரம் கோடியாக உள்ளது என கூறுகின்றனர்.வரும் ஆண்டில் 5 லட்சத்து,70 ஆயிரம் கோடி ரூபாயாக கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போதைய பதவி காலம் முடியும் நேரத்தில் தமிழகத்திற்கு அதிக அளவு கடன்களை சுமத்திவிட்டு செல்கிறார் எனக் கூறினார்.அவர் விட்டுவிட்டு போகும் கடன் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கோடி என்றார்.தமிழ்நாடு அரசின் வரவுக்கும் செலவுக்கும் இடையே ரூ65,994 கோடி பற்றாக்குறையாக உள்ளது.இந்த பற்றாக்குறையை நிரப்புவதற்கு மேலும் தமிழக அரசு கடன் வாங்க போகிறது.

இந்த லட்சணத்தில் மகளிர் குழுக்களின் கடன்,நகைக்கடன்,விவசாயக் கடன் பழனிசாமி அடுக்கிக்கொண்டே போகிறார்.இந்த கடன் தள்ளுபடிகளுக்கெல்லாம் ஒரு ரூபாய் கூட பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை என்றார்.இவர் இவ்வாறு கடனை விட்டு செல்வது பிரான்ஸ் நாட்டில் மன்னன் கூறியது நியாபகத்திற்கு வருகிறது என்று கூறி ,எனக்கு பிறகு பிரளயம் வரட்டுமே என்று அவர் சொன்னதை கூறியுள்ளார்.இவர்கள் வாக்குகளை பெற அதிக அளவு கடனை சுமத்துக்கின்றனர்.