வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வேற லெவல் போராட்டம்! ஆட்டம்கண்ட மத்திய அரசாங்கம்!

0
74
Another level of struggle by farmers against agricultural law! Central government shaken!
Another level of struggle by farmers against agricultural law! Central government shaken!

வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வேற லெவல் போராட்டம்! ஆட்டம்கண்ட மத்திய அரசாங்கம்!

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வர பட்டுள்ளதாக லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு நடிகர்,இயக்குனர் என அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஜனவரி குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்ட்டர் போராட்டத்தை நடத்தினர்.அது பெருமளவு கலவரத்தை  ஏற்படுத்தியது.இந்த போராட்டம் தொடங்கிய 11 நாட்களிலே நாடு தழுவிய முழு அடைப்பு தொடங்கியது.அப்போதும் அனைத்து மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நம் தமிழ்நாட்டில் திமுக மட்டும் தான் விவசாயிகளுக்காக தன் ஆதரவு குரலை எழுப்பியது.இந்த போராட்டம் தற்போது நான்கு மாதங்கள் நிறைவேறும் நிலையில்,நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் மீண்டும் நடந்தது.இந்த போராட்டத்திற்கு எதிர் கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பாஜக-வுடன் அதிக நெருக்கமாக உள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

அதனையடுத்து வாட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் ஹோலி.அந்த பண்டிகையின் போது விவசாயிகள் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அந்த நகலை தீயில் போட்டு எரித்து ஹோலி கொண்டாடினர்.இவர்கள் இவ்வாறு கொண்டாடியதை விவசாய சங்க கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் வெளியிட்டுள்ளார்.அதன்பின் அவர் தெரிவித்தது,வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு புதிதாக தனி சட்டம் அமைக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதாக இல்லை என விவசாயிகள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.