உலகளவில் மக்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது.உடல் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் பழுதடைந்தால் பல்வேறு நோய்
பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
தற்பொழுது பல மில்லியன் மக்கள் இந்த சிறுநீரக பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.உயிரை பறிக்கும் டாப்
10 நோய்களில் சிறுநீரக நோய்களும் இருக்கிறது.நமது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் சிறுநீரக நோய் பாதிப்பால் அவதியடைகின்றனர் என்ற ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது.
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிய தவறுவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.சிறுநீரக நோய் தீவிரமானப் பின்னரே அதன் அறிகுறிகள் தெரிய வருகிறது.நமது உடலின் மிகவும் முக்கிய உறுப்பாக சிறுநீரகம் திகழ்கிறது.இந்த சிறுநீரகத்தில் கற்கள்,அழுக்குகள்,யூரிக் அமிலம் போன்றவை அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.
நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை,உணவுமுறை பழக்கம்,மருந்துகள் போன்றவற்றால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது.அதேபோல் சிறுநீரை அடக்கி வைத்தல்,தண்ணீர் பருகாமை போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
சிறுநீரக நோய் அறிகுறிகள்:
1)சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம்
2)குமட்டல் பிரச்சனை
3)கணுக்கால் வீக்கம்
4)தூங்குவதில் சிரமம் சந்தித்தல்
5)அளவிற்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்
6)மிகவும் குறைவான அளவு சிறுநீர் கழித்தல்
7)பசியின்மை பிரச்சனை
8)வாந்தி உணர்வு
சிறுநீரக கல் பிரச்சனை
சிறுநீரகத்தில் கற்கள் படிந்தால் சிறுநீர் கழிக்கும் பொழுது கடுமையான வலி ஏற்படும்.சிறுநீரில் இரத்தம் சேர்ந்து வெளியேறும்.சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சிறுநீர் பாதை தொற்று
உங்கள் சிறுநீரக பாதையில் தொற்று இருந்தால் வலியுடன் சிறுநீர் வெளியேறும்.வயிற்று வலி,பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல் மற்றும் வலி உணர்வு,அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேற்றம்
நீங்கள் தண்ணீர் பருகாமல் இருந்தால் வெளியேற்றும் சிறுநீரில் துர்நாற்றம் வீசும்.சிறுநீரை அடக்கி வைத்தால் துர்நாற்றம் வீசும்.
சிறுநீரக கட்டி
சிறுநீர்ப்பையில் கட்டி இருந்தால் வயிற்று வலி,முதுகு வலி,சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சிறுநீரக செயலிழப்பு
நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் வயிறு உப்பசம்,உடல் சோர்வு,தூக்கமின்மை,வாந்தி உணர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண வேண்டும்.