பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! 

Photo of author

By Amutha

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! 

Amutha

Disgusting thing a passenger did on a flying plane!! Officials took action!!

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் பயணி செய்த அருவருப்பான காரியம்!! அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!! 

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அருவருக்கததக்க காரியத்தை செய்துள்ளார்.

ஏஐசி 866 ரக ஏர் இந்தியா விமானம் ஒன்று கடந்த 24 ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்த போது இருக்கை எண் 17எப்-ல் இருந்த பயணி ராம் சிங் என்பவர் அவர் அமர்ந்து 9-வது வரிசையில் இயற்கை உபாதைகளை கழித்து உள்ளார்.

இதனால் அவரின் செயலைக் கண்ட மற்ற பயணிகள் முகம் சுளித்தனர். மேலும் அவரின் இந்த கீழ்த் தரமான செயலை ஊழியர்களிடம் புகார் செய்தனர். ராம் சிங்கின் இந்த கேவலமான செயலுக்கு ஊழியர்கள் நேரிடையாக கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் இந்த சம்பவம் குறித்து விமானி கமாண்டருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரின் ஏர் இந்திய பாதுகாப்பு தலைவர் தகாத செயலில் ஈடுபட்ட பயணியை உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து பயணி மீது இந்திய தண்டனை சட்டம் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் 510 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பெண் பயணி மீது சக ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஏர் இந்திய விமானம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமாகும்.