தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை தகர்க்கும் வண்ணம் புதிய திட்டங்களை உருவாக்கியிருக்கிறது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுடைய புகார்களை நேரடியாக தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தமிழகம் முழுவதும் 2600 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதற்குண்டான தொகையை விவசாயின் உடைய வங்கி கணக்கிற்கு மின்னணு பரிவர்த்தனை மூலம் உடனடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சில இடங்களில் விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை பெற கையூட்டு வாங்குவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து நுகர் பொருள் வாணிப கழகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டுகள் பெறப்பட்டாலோ அல்லது ஏதேனும் புகார்கள் இருந்தாலோ அவற்றை தெரிவிக்க புகார் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன .
அந்த புகார் எண்கள் பின்வருமாறு :-
✓ சென்னை தலைமை அலுவலகத்தில் இருக்கக்கூடிய 18005993540 என்ற இலவச எண்ணிற்கு 24 மணி நேரமும் அழைத்து விவசாயிகள் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ குறிப்பாக, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் அந்த கொள்முதல் நிலையத்தின் உடைய மண்டல மேலாளர் /முதுநிலை மண்டல மேலாளர் அவர்களுடைய தொலைபேசி எண்களானது பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்றும் அந்த எண்களுக்கு விவசாயிகள் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ இனி தமிழகத்தில் உள்ள எந்த கொள்முதல் நிலையங்களிலும் கையூட்டு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அதை மீறி எங்காவது கையூட்டு பெறப்பட்டால் உடனடியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களின் உடைய whatsapp எண்ணான 9445257000 இதற்கு புகார்களை தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.