நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

0
158
Disruption in NEET exam! Hearing in the court today!
Disruption in NEET exam! Hearing in the court today!

நீட் தேர்வில் கோளறுபடி! ஐகோர்ட்டில் இன்று விசாரணை!

மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வானது முக்கியமான ஒன்றாக உள்ளது.அந்த நீட் தேர்வானது நாடு முழுவதும் கடந்த ஜூலை 17  ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மற்றும் மாதிரி விடைகளும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் விடைத்தாள்கள் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த பவமிர்த்தினிஎன்ற  மாணவி தனது விடைத்தாள்கள் மாறி விட்டதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீட் தேர்வில் 132 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக விடைத்தாள் அனுப்பப்பட்டுள்ளது. அந்த விடைத்தாள் என்னுடையது அல்ல எனவும் கூறினார்.

அவ்வாறு கூறுவதற்கான காரணம் நான் தேர்வில் 13 கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. ஆனால் அந்த விடைத்தாளில் 60  கேள்விகளுக்கு விடை  அள்ளிக்காமல் உள்ளது எனவும் விடைத்தாளின் கைரேகையை சரி பார்த்தால் எனது விடைத்தாள் கண்டுபிடிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

மேலும் எனது விடைத்தாளை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தேர்வு மையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.மேலும் மருத்துவ படிப்புக்கான கலதாய்வில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் .மருத்துவ படிப்பில் ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

Previous article50 நாளில் 9 சடலங்கள்! அரசு மருத்துவமனையில் தொடரும் உயிரிழப்பு!
Next articleடீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!..