டீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!..

டீச்சர்!.நீ ஒழுங்கா வீட்டு பாடம் எழுதல? பிளாஸ்டிக் பைப்பால் அடித்து கொடூரம்!..

டெல்லியில் முகுந்த்புர் பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கென தனியாக டியூஷன் சென்டர் ஒன்றை நடத்தி வருபவர் தான் குல்தீப்.இந்த டியூஷன் சென்டரில் இருபதுக்கும் மேற்பட்ட சிறுமிகள் வருகின்றனர்.அவரிடம் டியூஷன் செல்லும் சிறுமிகள் உடலில் பலத்த காயம் இருப்பதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் தொடர்பாக காவல் அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டது.புகாரியின் பேரில் குல்தீப் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக பேசியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி நேற்று சிறுமிகள் இருவரும் டியூசன் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தனர்.அப்போது அவர்களின் உடம்பில் காயம் இருந்ததை பெற்றோர்கள் காண்பித்திருக்கிறார்கள்.

காயங்களை பார்த்த காவல் அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் அந்த சிறுமிகள் இருவரையும் அடித்து கொடுமை படுத்தியது தெரியவந்தது.பின் பாதிக்கப்பட இரு சிறுமிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி டியூசன் நடத்தி வந்த குல்தீப் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவரான  ஸ்வாதி மலிவாலில் ட்விட்டர் பதிவில்  கூறப்பட்டிருப்பதாவது,வீட்டுபாடம் செய்யாமல் இருந்ததற்காக ஆறு வயது மற்றும் எட்டு வயது கொண்ட சிறுமிகளை ஒரு தனி அறைக்கு கூட்டி சென்று கொடுமையாக தாக்கியுள்ளார் அந்த டியூசன் டீச்சர்.அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காயத்தை பார்த்தால்  மெய்சிலிர்க்க வைக்கின்றது.

இது தொடர்பாக டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன்.அந்த டியூசன் டீச்சர் கட்டாயமாக கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.மேலும் பாதிக்கப்பட இரு சிறுமிகளை விசாரணை செய்த போது வீட்டுப்பாடம் எழுதாததால் டீச்சர் எங்களை தனி அறைக்கு பிடித்து தள்ளி பிளாஸ்டிக் பைப்பால் அடித்தார் எனக் கூறியிருக்கிறார்கள்.

அதன் பிறகு அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் டெல்லி போலீசார்கள் தெரிவித்துள்ளார்கள்.இந்த சம்பவம் பெற்றோர்ககள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.