மருந்து மாத்திரை இல்லாமல் கிட்னி ஸ்டோனை எளிமையாக கரைக்கலாம்!! இந்த 1 ட்ரிங் குடியுங்கள்!!

Photo of author

By Divya

Kidney Stone: இன்று சிறுநீரக கல் அனைவரையும் தாக்க கூடிய ஒரு நோய் பாதிப்பாக மாறி வருகிறது.சிறுநீரகத்தில் உப்புகள் படிந்து சிறுநீர் பாதையில் கற்களாக உருவாகிறது.இந்த கற்கள் வளர்ந்து சிறுநீர்ப்பாதையில் அடைப்பை ஏற்படுத்துகிறது.

சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறிகள்:

1)முதுகு வலி
2)அடிவயிற்றில் வலி
3)சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
4)சிறுநீரில் துர்நாற்றம் மற்றும் நுரை
5)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி உணர்வு

இந்த சிறுநீரக கல் பரம்பரை தன்மையாக ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.சிறுநீரக நோய் தொற்று காரணமாக கற்கள் உருவாகலாம்.இந்த சிறுநீரக கற்களை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து கரைத்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைத்தண்டு
2)முள்ளங்கி

செய்முறை:-

கால் கப் வாழைத்தண்டு மற்றும் 1/4 கப் முள்ளங்கி துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பரங்கிக்காய்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் விதை நீக்கப்பட்ட பரங்கிக்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)மாதுளை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் மாதுளையை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)ஆப்பிள் சீடர் வினிகர்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் 1/4 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் இருக்கின்ற கற்கள் முழுமையாக கரைந்துவிடும்.அதேபோல் வாழைப்பூ,வெள்ளரி உள்ளிட்ட பொருட்களை உணவில் சேர்த்து கொண்டால் சிறுநீரக கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடக் கூடாத உணவுகள்:

சிப்ஸ்,அப்பளம்,பாப்கான்,வடகம்,வற்றல்,கருவாடு,ஊறுகாய்,கொள்ளு,சீஸ் பொருட்கள்,டீ,காபி,சோடா,உப்பு,குளிர்பானங்கள்,சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.