Kidney Stone: கிட்னியில் உள்ள கற்களை எளிதில் கரைக்கும் வீட்டு வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சை இன்றி கிட்னி கற்களை எளிதில் கரைத்துவிடலாம்.
கிட்னி ஸ்டோன் அறிகுறிகள்:
1.சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்
2.அடிவயிற்று வலி
3.சிறுநீர் கழிக்கும் பொழுது வலி ஏற்படுதல்
4.முதுகு வலி
கிட்னி ஸ்டோன் வரக் காரணம:
1.உடலில் நீர்ச்சத்து குறைபாடு
2.சிறுநீர் அடக்கி வைத்தல்
3.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்
கிட்னி கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
1)கீழாநெல்லி இலை – நான்கு தேக்கரண்டி
2)சீரகம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
தெருவோரங்களில் கீழாநெல்லி செடி செழிப்பாக வளர்ந்திருக்கும்.இந்த செடியில் இருந்து சிறிதளவு கீழாநெல்லி இலைகளை பறித்து வாருங்கள்.
ஸ்டெப் 02:
பிறகு இந்த கீழாநெல்லி இலையை த்ண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.அதன் பின்பு அரை தேக்கரண்டி அளவு சீரகம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 03:
அதன் பிறகு மிக்சர் ஜார் அல்லது கல்வத்தில் இந்த கீழாநெல்லி இலை மற்றும் சீரகத்தை போட்டு விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டெப் 04:
பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒன்றரை கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.
ஸ்டெப் 05:
இதை தொடர்ந்து அரைத்த கீழாநெல்லி விழுதை கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக கலந்துவிட வேண்டும்.
ஸ்டெப் 06:
கீழாநெல்லி பானம் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருக வேண்டும்.தொடர்ந்து 7 தினங்கள் இந்த கீழாநெல்லி பானத்தை பருகினால் கிட்னியில் உள்ள கற்கள் சிறுநீர் வழியாக வந்துவிடும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)கீழாநெல்லி இலை – இரண்டு தேக்கரண்டி
2)மூக்கிரட்டை கீரை – இரண்டு தேக்கரண்டி
3)சின்ன வெங்காயம் – இரண்டு
4)தயிர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் கீழாநெல்லி இலை மற்றும் மூக்கிரட்டை கீரையை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதம் வரும் அளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 02:
பிறகு இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் உரித்துவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 03:
அடுத்து ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர் ஊற்றி அரைத்த இலை சாறு மற்றும் வெங்காய சாறை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வந்தால் கிட்னியில் உள்ள கற்கள் கரைந்துவிடும்.