தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

Photo of author

By Sakthi

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

Sakthi

Updated on:

தாய் தந்தை பிரிவால் மனவருத்தம்! 8ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

 

புதுச்சேரி மாநிலத்தில் தாய்க்கும் தந்தைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில் 8ம் வகுப்பு படிக்கும் அவர்களின் மகள் மனவருத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி மாநிலம் முத்தியால் பேட்டை பகுதியில் மூர்த்தி மற்றும் புஷ்பா இருவர்களும் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 14 வயதில் மகள் இருக்கிறார். மகள் பெயர் மதினா ஆகும். மதினா அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்னரே மூர்த்தியும் புஷ்பா அவர்களும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். மூர்த்தியும் புஷ்பாவும் தனிதனியே வசித்து வரும் நிலையில் மகள் மதினா அதே பகுதியில் உள்ள சித்தி வீட்டில் தங்கி படித்துவந்தார்.

 

தாய் புஷ்பா மற்றும் தந்தை மூர்த்தி இருவரும் பிரிந்ததன் காரணமாக மாணவி மதினா மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து ஒரு சில முறை தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்துள்ளார். அப்போது மதினாஅவர்களின்

சித்தப்பா மற்றும் சித்தி இருவரும் தடுத்து நிறுத்தினர்.

 

இந்த நிலையில் நேற்று(ஜூலை3) மாணவி மதினா அவர்களின் சித்தப்பா மற்றும் சித்தி இருவரும் வெளியே கடைக்கு சென்றனர்.  அந்த சமயம் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்த மாணவி மதினா வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.

 

கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மதினா அவர்களின் சித்தி மற்றும் சித்தப்பா இருவர்களும் வீடு உள்ளே பூட்டிருப்பதை அறிந்து சந்தேகம்  அடைந்து ஜன்னல் வழியாக சென்று பார்த்த பொழுது மாணவி மதினா கயிற்றில் தொங்கியபடி இருந்தார்.

 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே அருகில் உள்ளவர்களை அழைத்து அவர்களின் உதவியுடன் கதவை உடைத்தனர். பிறகு தூக்கில் தொங்கிய மாணவி மதினாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கிருந்த மருத்துவர்கள் மாணவி மதினாவை பரிசோதனை செய்து பார்த்ததில் மாணவி மதினா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

 

இந்த சம்பவம் குறித்து முத்தியால் பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர்களின் பிரிவில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.