கொரோனா தொற்று உடையவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மாவட்ட தலைவர்..!

Photo of author

By Parthipan K

உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், குணமடைவோர் வீதமும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஒருவர் கொரோனா அறிகுறியுடன் இருந்த நபரை பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.