மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு !

  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை! பெண் மயக்கம் அப்பகுதியில் பரபரப்பு !

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வினிஷ். இவர்  ஒரு வழக்கிற்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்த நிலையில் அவர் மன உளைச்சலில் பூதப்பாண்டி சுடுகாட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வினிஷ் பூதப்பாண்டி போலீசார் பொய் வழக்கில் தன்னை அலைக்கழிப்பதாக ஆய்வாளருக்கு புகார் எழுதிய கடிதத்தை வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.

அந்த கடிதத்தை வைத்து கொண்டு அவருடைய தாய் மற்றும் உறவினர்கள்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் அந்த வாக்குவாதத்தின் போது வினிஷின் தாயார் மயக்கம் அடைந்தார் அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment