வட்டார கல்வி அலுவலர் பணியிடம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

வட்டார கல்வி அலுவலர் பணியிடம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள தொடக்கக்கல்வி துறையில் வட்டார அளவில் பணிகளை நிர்வகிக்க வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இது நேரடி நியமனம் மூலமாகவும் மற்றும் ஆசிரியர் பதவி உயர்வு மூலமாகவும்  நிரப்பப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.

இதற்காக ஜூன் மாதம் ஆறாம் தேதி முதல் தேர்வர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி அன்று நடைபெற உள்ளது.

இந்த தேர்வு தமிழ் மொழிக்கு 50 மதிப்பெண்கள் மற்றும் பாடம் சார்ந்த தேர்வில் 150 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை ஐந்தாம் தேதி கடைசி நாள் என்று அறிவித்திருந்த நிலையில், இதில் பல சிக்கல்கள் எழுந்ததால் இதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

எனவே, இது இன்றுடன் நிறைவடையும் பட்சத்தில் விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் அதை சரிசெய்ய தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எனவே, பட்டதாரிகள் தங்கள் விண்ணப்பங்களில் உள்ள திருத்தங்களை ஜூலை மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம்.

திருத்தம் மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை www.trb.tn.gov.in. என்ற இணையத்தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள நினைத்தால் இந்த வழிமுறைகளை பின்பற்றி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.