அதிமுக தவெக மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை? முன்னாள் அமைச்சர் கூறிய சீக்ரெட்

Edappadi Palanisamy with Actor Vijay

தமிழகத்தில் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு கட்சிகளும் ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் யார் யாருடன் கூட்டணி, ஏற்கனவே அமைந்த கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் அன்றாடம் வெளியாகி வருகிறது. இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு இந்த தேர்தலில் அதிகமாகியுள்ளது. இதற்கு காரணம் நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்துள்ளதே. ஆரம்பத்தில் அவர் தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்த்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி … Read more

போதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்

Srikanth

திரையுலகில் பெரும்பாலும் சர்ச்சையிலிருந்து விலகி இருந்து வந்த நடிகர் ஸ்ரீகாந்த், தற்போது போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகிலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஜா கூட்டத்தில் இருந்து… போலீஸ் விசாரணை வரை! தமிழ் சினிமாவில் “ரோஜா கூட்டம்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், தனது நீண்டகால கேரியரில் சர்ச்சைகளைத் தவிர்த்து வந்தவர். விஜய்யுடன் “நண்பன்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். ஆனால் தற்போது அவர் மீது போதைப்பொருள் (கொகைன்) பயன்படுத்தியதாக … Read more

அதிமுக பாஜகவுடன் மதிமுக கூட்டணி?  விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வைகோ!

Vaiko

மறுமலர்ச்சி முன்னேற்றக்கழகம் தற்போது திமுக கூட்டணியில் உள்ளது. அண்மையில் வைகோவின் மகன் துரை வைகோ எங்களுக்கு இந்த முறை 12 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் எனவும், இது பற்றி திமுகவுடன் பேசுவோம் எனவும், நிறைய தொகுதிகள் கொடுத்தால் எங்கள் பலத்தை காட்டுவோம் எனவும் பேட்டி கொடுத்தார். அதேபோல பாஜக கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் உள்ள ஒரு முக்கியமான கட்சியுடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக அண்மையில் பேட்டி கொடுத்தார். அந்த கட்சி மதிமுக … Read more

பெற்றோரின் திருமண நாளை புறக்கணித்த அன்புமணி ராமதாஸ்! தொண்டர்களுக்கு ஏமாற்றம் 

Ramadoss

பாமக உட்கட்சி பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்படாமல் நாளுக்கு நாள் பிரச்சனையானது வளர்ந்து கொண்டே செல்கிறது. அப்பா மகனுக்குமிடையேயான இந்த பிரச்சனையில் கட்சியே இரண்டு அணிகளாக பிரிந்து ஆதரவு எதிர்ப்பு என செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க மாநாட்டில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. இதற்கு காரணமாக அமைந்த இளைஞர் அணி தலைவர் பதவி நியமனத்தில் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் … Read more

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

வெற்றிகரமாக நடந்து முடிந்த முருக பக்தர்கள் மாநாடு; 6 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

இந்து முன்னணி சார்பாக மதுரை வண்டியூரில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறும் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே திமுக கூட்டணி கட்சிகள் இடையே அதிக அளவு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் அந்த விமர்சனங்களையும் தாண்டி வெற்றிகரமாக இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன், மத்திய இணை செயலாளர் எல் முருகன், அண்ணாமலை, தமிழிசை … Read more

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: பக்தியா அரசியலா? – பாஜக மதுரையை தேர்வு செய்ததன் பின்னணி

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு, பாஜக அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மதுரையை தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன? திமுக கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து, 2026 தேர்தலையும் நன்கு எதிர்கொள்வதற்காக திமுக மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது. இதே பாதையில் பாஜகவும் நகர்ந்து, மதுரையையே முருக பக்தர்கள் மாநாட்டுக்கான இடமாக … Read more

“2026-ல் பாஜக சூரசம்ஹாரம்… முருகன் தண்டிப்பார்!” – செல்வப்பெருந்தகை காட்டம்!

“2026-ல் பாஜக சூரசம்ஹாரம்… முருகன் தண்டிப்பார்!” – செல்வப்பெருந்தகை காட்டம்!

மதுரையில் பாஜக சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இம்மாநாடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் அவரவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மதுரையில் முருக பக்தர் மாநாடு நடத்தும் பாஜகவின் நோக்கம் என்ன? இந்தக் கேள்வியைக் கேட்டு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவுக்கு நேரடியான சவால்களை முன்வைத்து கருத்து தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை முருகன் சூரசம்ஹாரம் செய்வார்” என்று காட்டமாக … Read more

திமுக கூட்டணியில் விரிசல்… அதிமுக-பாஜக கூட்டணிக்கு தாவும் மதிமுக?

Vaiko

தற்போதைய அரசியல் சூழலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறக்கூடிய சூழ்நிலையில் இருப்பது போன்று அரசியல் காட்சிகள் நகர்ந்து வருகின்றன. கூட்டணியில் அங்கீகாரம் மற்றும் பிரதான இடமளிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மதிமுக அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இடமில்லை? தற்போதைய விவகாரங்களுக்கேற்ப, மதிமுக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் “கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும்” என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில், மாநிலங்களவையில் வைகோவுக்கு மறுவாய்ப்பு வழங்காதது என்பது முக்கியக் காரணமாகக் … Read more

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

முருக பக்தர்கள் மாநாடு! வண்டி வண்டியாக வந்து குவியும் மக்கள் கூட்டம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை இந்து முன்னணி சார்பாக முருக பக்தர்கள் மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் ஆறுபடை வீடுகள் மாதிரி கோயில்கள் தத்துரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களில் முருகனின் ஆறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன, அதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை இரண்டு நேரமும் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகின்றது. மதுரையில் ஒரே இடத்தில் … Read more

மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ்; இனி இலவசமாக பயணிக்கலாம்!

மூத்த குடிமக்களுக்கு வெளியான குட் நியூஸ்; இனி இலவசமாக பயணிக்கலாம்!

தமிழக அரசு சார்பாக மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மூத்த குடிமக்கள் தினந்தோறும் பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு இலவச பஸ் டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றது. அந்த வகையில் தற்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை சேர்ந்த மூத்த குடிமக்களுக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றனர். இந்நிலையில் ஜூலை மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் மாதத்திற்கு பத்து டோக்கன்கள் வீதம் ஆறு மாதத்திற்கான கட்டணம் இல்லாமல் … Read more