மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
புது தில்லியில், பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்,
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க 3,737 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.
இந்த தீபாவளி போனஸ் தொகை வரும் விஜயதசமிக்கு முன்பாக ஒரே தவணையாக மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தீபாவளி போனஸ் வழங்குவதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பண்டிகை காலத்தை சிறப்பாக கொண்டாட உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.