Tamilnadu: இந்த ஆண்டு தீபாவளிக்கு ஜவுளி, தங்கம், பட்டாசு விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் கோலாகலமாக கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி. தமிழகத்தில் மட்டும் இந்த தீபாவளி பண்டிகைக்கு தங்கம், ஜவுளி, பட்டாசு விற்பனை ரூ. 60 ஆயிரம் கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் தீப ஒளி என்கிற தீபாவளி திருநாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் நோன்பு இருப்பவர்கள் வியாழக்கிழமையும் இல்லாதோருக்கு வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு, காரம், டாஸ்மாக், தங்கம், வெள்ளி போன்றவை விற்பனை களை கட்டுவது வழக்கம். இந்த முறை வடகிழக்கு பருவமழை பட்டாசு விற்பனையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது.
ஆனால் தீபாவளிக்கு முன் புதன்கிழமை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதனால் அங்குள்ள பட்டாசு விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.எனினும் மற்ற மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பட்டாசு விற்பனை களை கட்டியது என்றே கூறலாம். மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆன்லைன் விற்பனை அதிகமாக உள்ளது.
இந்த தீபாவளிக்கு மட்டும் ஜவுளி விற்பனை ரூ. 27 ஆயிரம் கோடி விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி, தங்கம் ரூ.5 ஆயிரம் கோடி மற்றும் மது உள்ளிட்டவை சேர்த்து ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் விற்பனை ஆகியுள்ளதாக விற்பனையாளர்கள் மகிழ்ச்சி.