தீபாவளி: “ஆவின் ஸ்வீட்” எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்!

0
153
#image_title

தீபாவளி: “ஆவின் ஸ்வீட்” எத்தனை கோடிக்கு விற்றுள்ளது தெரியுமா? வெளியானது ஷாக்கிங் ரிப்போர்ட்!

தமிழக அரசால் கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் ஆவின் பால் நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற பால் நிறுவங்களை ஒப்பிடுகையில் ஆவினில் குறைந்த விலைக்கு பால் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வரும் ஆவின் நிறுவனம் பாலின் தரத்திற்கேற்ப பாக்கெட் செய்து விற்பனை செய்து வருகிறது. பால் விற்பனை மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பாலை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், பால்கோவா, ரசகுல்லா, மைசூர் பாக்கு உள்ளிட்ட 255 வகையான தரமாக பால் பொருட்களை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறது. ஆவின் பொருட்களின் தரம் நன்றாக இருப்பதினால் இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு இருக்கிறது.

ஆவின் நிறுவனம் தயாரிக்கும் இந்த் ஸ்வீட் உள்ளிட்ட பொருட்கள் ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்கப்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் தீபாவளியை டார்கெட் செய்து ஸ்வீட் பொருட்களை விற்று லாபம் பார்த்து வரும் ஆவின் நிறுவனம் கடந்த தீபாவளி பண்டிகையில் ரூ.130 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.150 கோடக்கு டார்கெட் செய்யப்பட்டு ரூ.116 கோடிக்கு ஆவின் ஸ்வீட் விற்பனையான நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.149 கோடி டார்கெட் செய்யப்பட்டு ரூ.130 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சுமார் 14 கோடி ரூபாய் வரை ஆவின் ஸ்வீட் விற்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனத்தின் இயக்குநர் வினீத் தெரிவித்து இருக்கிறார்.

Previous articleபடியில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவனுக்கு நேர்ந்த துயரம்!! இனியாவது விழிப்புணர்வு ஏற்படுமா?
Next articleவீட்டில் லட்சுமி கடாக்சம் தங்கி செல்வம் பெருக இதை இந்த நாளில் போதும்!!