நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்! இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

0
300

இந்தியா பாகிஸ்தான் என்றாலே எப்போதும் எலியும்,பூனையுமாகத் தான் இருப்பார்கள் கிரிக்கெட்டில் கூட ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்களிடையே அப்படி ஒரு ஆர்வம் இருக்காது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் இந்திய ரசிகர்களிடையே அதீத ஆர்வம் திடீரென்று தொற்றிக் கொள்ளும்.

அப்படி ஒரு போட்டியும் பொறாமையும் நாட்டு மக்கள் நடுவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் நேற்றைய தினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அட்டாரி வாகா எல்லையில் இருக்கின்ற இந்திய எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை நருக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்த மாலையை உடனடியாக பயன்படுத்துங்கள்! கடன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்!
Next articleஇங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் முதல் ஹிந்து ரிஷி சுனக்! இந்தியர்கள் மகிழ்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here