இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் முதல் ஹிந்து ரிஷி சுனக்! இந்தியர்கள் மகிழ்ச்சி!

0
150

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த ஜூலை மாதத்தில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவர் தான் பிரதமராக இருக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கை வெற்றி பெற்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ்ட்ரெஸ் புதிய பிரதமர் ஆனார். ஆனாலும் அவர் முன்னெடுத்த பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் குழப்பத்தை உண்டாக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் 45 நாட்கள் மட்டுமே என் பதவியில் இருந்த லிஸ் ட்ரஸ் சமீபத்தில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். கட்சியின் 1.70 லட்சம் பிரதிநிதிகள் வாக்களித்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். இந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் உள்ளிட்ட இருவரின் பெயர்கள் முன்னிலையில் இருக்கின்றன.

இதற்கு நடுவே பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் தலைவரும்,பெண் நாடாளுமன்ற உறுப்பினருமான யுமான பென்னி,மொர்டார்ட் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு சில மணி நேரமே இருந்த நிலையில் போட்டியிலிருந்து விலகுவதாக போரிஸ் ஜான்சன் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியைச் சார்ந்த ரிஷி சுனக்குக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது அவருக்கு 178க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.பென்னி மோர்டார்ட்க்கு 40-க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சி விதிகளின்படி குறைந்தபட்சம் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும் என்று சொல்லப்படுகிறது. போதுமான ஆதரவு இல்லாததால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் ரிஷி சுனக் போட்டியின்றி கட்சித் தலைவராகவும், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகும் வாய்ப்பு இந்தியாவை பூர்வீகமாக கொண்டவருக்கு கிடைக்க உள்ளது அங்கே வாழும் இந்தியர்களிடையே இந்த நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் இங்கிலாந்தின் வெள்ளையர் அல்லாத ஒருவர் முதல் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் பெருமையை பெறுகிறார். போட்டி உண்டானால் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும். அதில் கட்சிப் பிரதிநிதிகள் வாக்களித்து புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

ரிஷி சுனக் இங்கிலாந்து நாட்டின் சவுத்தம்ப்டன் நகரில் 1980 ஆம் வருடம் மே மாதம் 12ஆம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை கேனியாவை சார்ந்தவர் தாய் தான்சானியாவை சார்ந்தவர் இவருடைய தந்தை வழி தாத்தா பாட்டி பஞ்சாபில் பிறந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்து. அதன் பிறகு இங்கிலாந்துக்கு சென்றனர் என்று சொல்லப்படுகிறது.