தீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

Photo of author

By Divya

தீபாவளி: பட்டாசு வெடிக்க காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

நம் இந்திய நாட்டில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புது உடை, இனிப்பு பலகாரம், பட்டாசு என கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த தீபவளி பண்டிகையின் பொழுது சில கட்டுப்பாடுகளை விதிப்பதை மத்திய மற்றும் மாநில அரசு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து வருகிறது.

தீபாவளி அன்று வெடிக்கப்படும் பட்டாசுகளால் அதிகளவு காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் நோக்கில் பசுமை பட்டாசுகளை அறிமுகப்படுத்தி
அதனை வெடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதனை கடைபிடிக்காமல் ஆபத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் சீன பட்டாசுகளை வாங்கி வெடிப்பதை பெரும்பாலானோர் தொடரந்து செய்து வருவதால் இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் மட்டுமே வெடிக்க அனுமதி வழங்கி வரும் தமிழக அரசு விதியை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டிற்கான தீபாவளி வருகின்ற நவம்பர் 12 அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

அது என்னவென்றால் தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி டூ 7 மணி மற்றும் இரவு 7 மணி டூ 8 மணி வரை பட்டாசு வெடிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கி இருக்கிறது. அரசு அனுமதித்த நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.