தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்!

0
166

தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்!

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாதமட்டன் கால் கிலோ ,உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் , தனியாத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , எண்ணெய் தேவையான அளவு, பட்டர் அல்லது டால்டா தேவையான அளவு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி அளவு ,எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், ஒரு பட்டை சிறிதளவு.

 

செய்முறை :

முதலில்  மட்டனை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.அதன் பிறகு அதனை மிகச்சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை நன்கு வடித்து அதில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு, தனியாத் தூள் அனைத்தும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து வேக விட வேண்டும்.

 

அதன் பிறகு வெந்ததும் தண்ணீர் முழுவதும் வற்றி சுருளவிட்டு இறக்க வேண்டும்.அதனையடுத்து ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் மற்றும் பட்டர் சிறிது ஊற்றி அதில் பட்டையை போட வேண்டும். பட்டை நன்கு வெடித்ததும் அதில் வெந்த மட்டனை போட்டு நன்கு வறுத்து இறக்கலாம். கடைசியாக இறக்கும் பொழுது சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் கொத்துமல்லித் தழை தூவி இறக்க வேண்டும்.

Previous articleமோதிஜூர் லட்டு! தீபாவளி ஸ்வீட் ரெடி!
Next articleகாற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!