காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

0
68

காற்று மாசுபாட்டின் உச்சம்! பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அக்டோபர் 24-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் நிலையில் டெல்லியில் பட்டாசு விற்கவும்,பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக காற்றின் தரம் அபாய அளவை தாண்டி மிக மோசமான நிலையில் உள்ளதாக டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு புகையால் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலைக்கு செல்லும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்கவும் பட்டாசு விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும்,சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் பட்டாசு தயாரித்தல் அல்லது பதுக்கி வைத்தல் மற்றும் சட்டவிரோதமாக விற்பனை செய்தால் வெடிபொருள் சட்டத்தின் கீழ் 5000 ரூபாய் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் அளிக்கப்படும் எனவும் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி தினத்தன்று ஏற்றுவது பட்டாசு இல்லை தீபா ஒளி என்று டெல்லியில் விழிப்புணர்வு முழக்கங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

author avatar
Pavithra