தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

0
253

தீபாவளி ஸ்வீட் ரெடி! உங்களுக்கா சுவையான பால்கோவா இதோ!

தேவையான பொருட்கள் :பால் இரண்டு லிட்டர், சர்க்கரை முக்கால் கிலோ மற்றும் நெய் தேவையான அளவு.

செய்முறை :

முதலில் அடிக்கனமான இரும்பு வாணலியில் பாலை ஊற்றி காய்ச்ச வேண்டும். இரும்பு வாணலி இல்லாதவர்கள் அடிக்கனமான வேறு பாத்திரத்தைப் பயன்படுத்தலாம். பால் கொதிவர ஆரம்பித்ததும் சர்க்கரையை கொட்டி நன்கு கிளற வேண்டும்.

 

அதன் பிறகு பால் நன்கு சுண்டி வரும் வரை கிளற வேண்டும். பால் சுண்ட ஆரம்பித்தவுடன் கலர் சற்று வெளிர் மஞ்சள் நிறமாக மாற ஆரம்பிக்கும்.மேலும் விடாது கிளறி, பால் சுண்டி கெட்டியாகத் தொடங்கியவுடன் அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் முழுவதையும் ஒரே முறையில் ஊற்றி விடாமல், முதலில் பாதியை ஊற்றி கிளறிவிட்டு, பிறகு மீதியை ஊற்ற வேண்டும்.

அதன் பிறகுநெய்யுடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும். நெய் நன்கு சேர்ந்து கோவா கெட்டியாகத் தொடங்கும்.அதனையடுத்து இறக்கி வைத்து கிளறி விட்டு சூட்டை தணிக்க வேண்டும்.நன்கு கெட்டியாக மாறி இருக்கும். அதை அப்படியே மற்றொரு பாத்திரத்தில் அல்லது தட்டில் கொட்ட வேண்டும். பால்கோவாவின் ஓரங்களில் சிறிது நெய் விட வேண்டும். மேலும் இவை இரண்டு வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

Previous articleசந்திரோதய கௌரி விரதம்
Next articleவெள்ளை எருக்கன் செடியின் மகத்துவம்! இவ்வாறு செய்தால் இந்த பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here