தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!! 

0
125
#image_title

தீபாவளி பண்டிகை இனிப்பு விற்பனை!!! ஆவினில் அக்டோபர் 10 முதல் துவக்கம்!!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் மூலமாக நடைபெறும் இனிப்புகள் விற்பனை அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆவின் நிர்வாகத்தின் மூலமாக கடந்த 2022ம் ஆண்டு இனிப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டது பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது அடுத்து இந்த ஆண்டும் இனிப்புகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் நிர்வாகம் மூலமாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள இனிப்புகள் வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. அக்டோபர் 10ம் தேதி முதல் மக்கள் தங்களுக்கு தேவைப்படும் இனிப்பு வகைகளை ஆவின் சில்லறை விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

சிறு, குறு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் தங்களுக்கு தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம்,  6வது தளம், விற்பனை பிரிவு, கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை-35 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் 94449 15453, 73580 18394, 73580 18392, 73580 18390 என்ற தொலைபேசி எங்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்” என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் விற்பனை செய்யப்படவுள்ள இனிப்புகளின் விலைப் பட்டியலையும் ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Previous articleஇன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!
Next articleநாமினேஷனில் இடம் பெற்றதற்கு மகள் ஜோவிகாவை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் வனிதா !