இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!

0
41
#image_title

இன்று நடைபெறும் இறுதிப் போட்டி!!! வெற்றி பெற்று தங்கத்தை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!!

ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் இன்று(அக்டோபர்7) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. இரண்டு அணிகளும் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் விளையாடவுள்ளது.

2023ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கடந்த செப்டம்பர் 23ம் தேதி சீனா நாட்டின் ஹாங்சோங் நகரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. 15வது நாளான இன்று(அக்டோபர்7) கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

இன்று(அக்டோபர்7) நடைபெறும் இறுதிப் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியும், குல்பதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதவுள்ளது. இரண்டு அணிகளும் மோதும் இந்த இறுதிப் போட்டி இன்று(அக்டோபர்7) காலை 11.30 மணிக்கு சீனாவின் ஷாங்சோங் நகரில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அதே போல ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு அணிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் ஆகியோர் உள்ளதால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.