சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்? நடந்தது என்ன?

0
145

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மயக்கம்? நடந்தது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள படி அக்ரகாரம் கிராமம் உள்ளது. கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 175 மாணவ-மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று சத்து மாத்திரை வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதிய உணவுக்காக சத்துணவு மற்றும் முட்டைகளையும் உட்கொண்டனர்.

இந்நிலையில் சத்து மாத்திரைகளை சாப்பிட்ட 19 மாணவர்கள் மற்றும் 24 மாணவிகள் என மொத்தம் நாற்பத்தி மூன்று பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளி மாணவ மாணவிகள் அனைவரையும் அப்பள்ளி தலைமையாசிரியர் ஆம்புலன்ஸ் 108 க்கு தொலைபேசி மூலம் வரவழைத்து அவர்கள் அனைவரையும் கொண்டு சென்றார்கள். அப்பகுதியில் இயங்கிவரும் அரசு சுகாதார மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Previous articleவிஜய்காந்த் உடல்நிலை சரியாக சூரி செய்த அசத்தலான செயல்!
Next articleகொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்!